புளியங்குடி நகராட்சி முன்னாள் தலைவரை தாக்கிய 2 பேர் கைது


புளியங்குடி நகராட்சி முன்னாள் தலைவரை தாக்கிய 2 பேர் கைது
x

புளியங்குடி நகராட்சி முன்னாள் தலைவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி முன்னாள் நகராட்சி தலைவர் வெங்கட்ராமன் (வயது 78). இவர் தற்போது புளியங்குடி சிந்தாமணி அக்ரஹாரம் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வெங்கட்ராமனை அவதூறாக பேசி கற்கள் மற்றும் அரிவாளின் பின்பக்கத்தால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரத் லிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சிந்தாமணியை சேர்ந்த சேகர், பால்ராஜ், சொர்ணம், முத்தையா ஆகியோர் வெங்கட்ராமனை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து சேகர், பால்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story