கோவில் திருவிழாவில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது


கோவில் திருவிழாவில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை ஜாம்பான் சாமி கோவில் திருவிழா கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது தண்டாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் பூமிநாதனை (வயது 26) அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூமிநாதன் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் பூமிநாதனை தாக்கிய கண்ணையன் மகன் மணிகண்டன் (30), ராஜேந்திரன் மகன் வைரவமூர்த்தி (32) ஆகிய இருவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story