வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது


வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது
x

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ரோசி விக்டோரியா(வயது 40). இவரது வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை


மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ரோசி விக்டோரியா(வயது 40). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அவர் உள்ளே சென்று பார்ததபோது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகைகள், 3 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவரது வீட்டில் திருடியது மேலமடையை சேர்ந்த ராஜாசிக்கந்தர்(20), சுந்தரராஜன்பட்டியை சேர்ந்த ஆகாஷ்(19) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கார்த்திக் என்பவரை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story