வீடுகளில் புகுந்து நகைகளை திருடிய 2 பேர் கைது


வீடுகளில் புகுந்து நகைகளை திருடிய 2 பேர் கைது
x

கோட்டூர் அருகே வீடுகளில் புகுந்து நகைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் அருகே வீடுகளில் புகுந்து நகைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகைகள் திருட்டு

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலதாசன் (வயது58). கடந்த மே மாதம் இவரது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடி சென்று வீட்டனர்.

இதபோல் கோட்டூர் அருகே குமாரமங்கலத்தில் வசிக்கும் அகஸ்டின் ஜான்சி (49) என்பவரது வீட்டில் 2 பவுன் நகைகளையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோட்டூர் அருகே உள்ள கம்பங்குடி சாலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளனர். இதனால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள், திருவாரூரை சேர்ந்த செந்தில்நாதன் (30), விக்னேஷ் (25) என்பதும், இவர்கள் தான் கமலதாசன், அகஸ்டின் ஜான்சி ஆகியோர் வீடுகளில் நகைகளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து செந்தில் நாதன், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.


Next Story