பெண் உள்பட 3 பேரை வெட்டிய 2 பேர் கைது


பெண் உள்பட 3 பேரை வெட்டிய 2 பேர் கைது
x

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் பெண் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

பொன்மலைப்பட்டி, செப்.15-

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் பெண் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அண்ணன்-தங்கை

திருச்சியை அடுத்த நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபா (வயது 40). இவரது அண்ணன் கார்த்திக் (42). இவர் திருச்சி கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் போக்குவரத்து போலீஸ்சுஜாதா என்பவருக்கும் பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.

இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி நில அளவையர் கோர்ட்டு உத்தரவின் படி பாதையை அளப்பதற்காக சென்றார். அப்போது சுஜாதா மற்றும் அவரது உறவினர்கள் 10 பேர் சேர்ந்து பாதையை அளக்க கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் நில அளவையர் திரும்பி சென்று விட்டார். பின்னர் மறுநாள் 11-ந்ேததிபாதையை அளப்பதற்காக நில அளவையர் வந்துள்ளார். மீண்டும் அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

3 பேருக்கு வெட்டு

இதனிடையே, அங்கு கார்த்திக் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டின் முன்பு நின்று இருந்தார். அப்போது கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுஜாதாவின் உறவினரான பார்த்திபன் (32) என்பவர் திடீரென்று தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கார்த்திக்கை சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க வந்த கார்த்திக்கின் தங்கை ரூபா மற்றும் அவரது கணவர் ரவிக்குமார் ஆகியோரையும் வெட்டினராம். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிசிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக்கின் தங்கை ரூபா அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் பார்த்திபன், விக்கி என்கிற விக்னேஷ், சுஜாதா, பாலா என்கிற பாலச்சந்தர், அங்கவை, தனலட்சுமி, பத்மா, பிரபு, கிருஷ்ணவேணி, வினோத், சேகர் ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பார்த்திபன், லால்குடி அருகே அன்பில் ஜங்கமாபுரம் பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் கண்ணன் ஆகிய 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான கார்த்திக் உள்ளிட்டவர்களை கத்தியால் வெட்டிய காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story