சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது


சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர்,

கரூர் வாங்கல் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வாங்கல் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட வாங்கலை சேர்ந்த விஜய் (வயது 25), வ.உ.சி. தெருவை சேர்ந்த தென்னரசு (30) ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மணி (32) என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story