வாலிபரை விபசாரத்துக்கு அழைத்த 2 பேர் கைது
போடி மசாஜ் நிலையத்தில் வாலிபரை விபசாரத்துக்கு அழைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி
போடி பங்கஜம் பிரஸ் தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 33). இவர் போடி ஆர்.ஐ. அலுவலக ரோட்டில் உள்ள தனியார் மசாஜ் நிலையத்திற்கு மசாஜ் செய்ய சென்றுள்ளார். அங்கு இருந்த நபர்கள் மசாஜ் செய்ய ரூ.500 என்றும், டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண்ணுடன் சந்தோஷமாக இருக்க ரூ.1,500 என்றும் கூறி விபசாரத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கப்பாண்டி போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மசாஜ் நிலையத்தில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சஜித் (28), வைசாக் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story