விதிகளை மீறி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது


விதிகளை மீறி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
x

விதிகளை மீறி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசண்முகநாதன் மற்றும் போலீசார் வி.சொக்கலிங்காபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆலையில் உரிய அனுமதியின்றி கம்பி மத்தாப்பூ தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஆலையில் இருந்த சண்முகநாதன்(வயது 52), தங்கராஜ் (51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கார்த்திக்ராஜ், பாண்டி மணிச்சோலை ஆகியோரை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story