அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி, கலைஞர் காலனி, அண்ணா காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா, கருந்திரி தயாரிக்கும் பணி நடக்கிறதா என வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் சோதனை நடத்தினார். அப்போது கலைஞர் காலனி வீட்டின் பின்புறம் தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்து கொண்டிருந்த சந்துரு (வயது 36), மணிகண்டன் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்களிடம் இருந்த தலா 20 கிலோ சோல்சா வெடிகளை பறிமுதல் செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக தகரசெட், வீடுகள், காட்டுப் பகுதி என எண்ணற்ற இடங்களில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோந்து பணியை தீவிரப்படுத்தி அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு, கருந்திரி தயாரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.