கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது
கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம்
கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாசன் தலைமையிலான போலீசார் நேற்று ஷா நகர், ஹபில்ஸ் பேட்டை, பழனிபேட்டை மற்றும் கிருஷ்ணாம்பேட்டை பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பழனி பேட்டை எஸ்.ஆர்.கேட் பகுதியில் உருட்டுக்கட்டை வைத்துக்கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த நபரை கண்ட சப்- இன்ஸ்பெக்டர் தாசன் அந்த நபரை பிடித்து விசாரித்தார்.
அவர் ஷா நகர் பகுதியை சேர்ந்த சுனில் (வயது 21) என்பது தெரியவந்தது. இதே போன்று ஹபில்ஸ் பேட்டை ரெயில்வே குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த வெங்கடேசபுரம் பகுதியை ரூபேசிடம் (22) சோதனை செய்தனர். இருவரிடமும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.