முதியவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


முதியவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட  2 பேர் கைது
x

கபிஸ்தலம் பகுதியில் முதியவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் பகுதியில் முதியவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

பாபநாசம் ஊரக உட்கோட்ட போலீஸ் சரக பகுதிகளில் வயதானவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி மற்றும் போலீசார் கபிஸ்தலம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி பகுதியில் பழமை வாய்ந்த குடியிருப்பில் மர்மநபர்கள் தங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் சென்னை மேடவாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் டெல்லி துரை (வயது23)., கும்பகோணம் மாடாகுடியை சேர்ந்த சிவகுமார் மகன் பிரவீன் (23) என்பதும், அவர்கள் கபிஸ்தலம் பகுதியில் முதியவர்களிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டெல்லி துறை, பிரவீன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம், 2 பட்டாக்கத்திகள், 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள டெல்லி துரை மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும்குறிப்பிடத்தக்கது.


Next Story