சிறுவர்களுக்கு மது விற்ற 2 பேர் கைது


சிறுவர்களுக்கு மது விற்ற 2 பேர் கைது
x

சுத்தமல்லியில் சிறுவர்களுக்கு மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை சுத்தமல்லி டாஸ்மாக் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 சிறுவர்களிடம் மது விற்றதாக திருப்பணிகரிசல்குளம் மணிமேடை தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் (வயது 34), கொத்தன்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பிரவீன் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story