கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் தத்தனூர் கீழவெள்ளி பிரிவு சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மூர்த்தியான் காலனி தெருவை சேர்ந்த சேகர் (வயது 52), தத்தனூர் கீழவெளியை சேர்ந்த ராஜேந்திரன் (59) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.4 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story