கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

பேட்டையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசீலன் மற்றும் போலீசார் பழைய பேட்டை இணைப்பு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது ஆடு அறுப்பு மையம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்தனர். விசாரணையில், பழைய பேட்டை அணவரதசுந்தர விநாயகர் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் இளவரசன் (வயது 30), பழையபேட்டை அன்னை இந்திரா குடியிருப்பை சேர்ந்த கருப்பையா மகன் பரமசிவன் (22) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story