கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பெருங்கட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கஞ்சா விற்பதாக செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா கலவை பகுதியை சேர்ந்த ராகுல் (வயது 19) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு விற்பதற்காக கஞ்சா பாக்கெட் வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரது கைது செய்து, கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வெங்கோடு கிராமம் வழியாக ரோந்து சென்றனர். அப்போது முத்துமாரியம்மன் கோவில் அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றார். உடனே வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், வெங்கோடு கிராமம் ரோடுத்தெரு காலனியை சேர்ந்த விக்னேஷ் (21) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.