பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா

திருச்சி மாநகர் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் நின்று இருந்த 2 பேரை கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த ஒரு பையை சோதனை செய்ததில், அதில் 2½ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார். அவர்களை பிடித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மாணவர்களுக்கு விற்பனை

விசாரணையில் அவர்கள் கே.கே.நகர் உடையாம்பட்டி பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 32), திருச்சி அருகே மலைப்பட்டி பகுதியை சேர்ந்த கோபால் (40) என்பது தெரியவந்தது. அவர்களது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு 5½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் சென்று கஞ்சாவை வாங்கி கடத்தி வந்து திருச்சி மாநகர் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முகமது அசாருதீன், கோபால் ஆகியோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பதுக்கியதாக 4 பேர் சிக்கினர்

இதேபோல் நேற்று முன்தினம் எடமலைப்பட்டி புதூர் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43), மன்சூர் அலிகான் (23), தினேஷ் (21) ஆகியோரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருச்சி அம்மைப்பன் நகர் குழுமாய்கரை அருகே கஞ்சா விற்ற ஹரிச்சந்திரன் (21) என்பவரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் கைது செய்தனர்.


Next Story