மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையத்தை அடுத்த மேலகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த செல்வம்(வயது 55) மற்றும் வானதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த செல்வராசு(62) ஆகியோர் அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிந்து செல்வம் மற்றும் செல்வராசு ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story