சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x

சாராயம் விற்ற 2 பேர் கைது

திருவாரூர்

நன்னிலம்:

பேரளம் பகுதிகளில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக பேரளம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பேரளம் அருகே உள்ள நாடாகுடி மெயின் ரோட்டை சேர்ந்த சுந்தர்(வயது54), நாடாகுடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உலகநாதன்(50) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 120 லிட்டர் சராயத்தை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story