மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
விராலிமலை தாலுகா பூமாதாநகர் பகுதியில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி எஸ்.புதூரை சேர்ந்த சிவமணி மகன் வெள்ளைச்சாமி (வயது 28) என்பவர் மது பாட்டில்களை விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஆலங்குடி அருகே துவார் பஸ் நிறுத்தத்தில் வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்த ஆத்தாங்கரைவிடுதியை சேர்ந்த கணபதி மகன் கமலக்கண்ணன் (23) என்பவரை ஆலங்குடி போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story