ெரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்திய 2 ேபர் கைது


ெரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்திய 2 ேபர் கைது
x
தினத்தந்தி 28 April 2023 1:00 AM IST (Updated: 28 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் வழியாக கேரளா சென்ற ெரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ெரயிலில் சோதனை

சேலம் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டு பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் முனுசாமி, அசோக்குமார் ஆகியோர் சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர். கருப்பூர் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்த போது பொதுப்பெட்டியில் சோதனை நடத்தினர்.

கஞ்சாவுடன் 2 பேர் கைது

அப்போது 5 கிலோ கஞ்சாவுடன் ெரயிலில் வந்த ஒடிசாவை சேர்ந்த படல் பெஹ்ரா (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒடிசா மாநிலம் பலாங்கீர் என்ற ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோடு வரை பயணம் செய்ய முன்பதிவு இல்லாத டிக்கெட் வைத்திருந்தார்.

ஈரோடு சென்று அங்கிருந்து பழனிக்கு செல்வதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரது செல்போனை போலீசார் சோதனை செய்ததில் அதில் கஞ்சாவை புகைப்படம் எடுத்து வைத்திருந்தார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நடத்திய சோதனையில் அதே ரெயிலில் வந்த மற்றொருவரான சேலம் மாவட்டம் சின்னகல்வராயன் மலை கீரைக்கடை பகுதியை சேர்ந்த சடையன் (வயது 51) என்பவரையும் பிடித்தனர். அவரும் 5 கிலோ கஞ்சா வைத்திருந்தார். அவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சென்று கஞ்சாவை வாங்கி கொண்டு சேலத்துக்கு வருவதாக தெரிவித்தார். கைதான 2 பேரிடம் இருந்து தலா 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story