மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேர் கைது
செம்பனார்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கடையூர்:
செம்பனார்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாராயம் கடத்தல்
செம்பனார்கோவில் பகுதியில் நேற்று அதிகாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது செம்பனார்கோவில் அருகே சாத்தனூர் பகுதியில் இரு மூட்டைகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மணல்மேடு அருகே உள்ள ஆத்தூர் கிராமம் ஜின்னா தெருவை சேர்ந்த லியாக்கத் அலி மகன் முகமது தவ்பீக்(வயது 29), ஆத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த ரவி மகன் ரகுமாறன்(29) என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து சாக்கு மூட்டைகளில் சாராய பாக்கெட்டுகளை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.
2 பேர் கைது
இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது தவ்பிக், ரகுமாறன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.