காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x

காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று தெற்கு புறவழிச்சாலை குறிச்சி சந்திப்பு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அதில் 25 மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. காருடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக தாழையூத்து மங்களா குடியிருப்பை சேர்ந்த டிரைவர் ஆறுமுகம் (வயது 38) மற்றும் தாழையூத்தை சேர்ந்த சுடலை என்ற சுரேஷ் (20) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். கரையிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story