முசிறி அருகே வாலிபரை குத்திக்கொன்ற 2 பேர் கைது


முசிறி அருகே வாலிபரை குத்திக்கொன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2023 1:05 AM IST (Updated: 9 July 2023 6:02 PM IST)
t-max-icont-min-icon

முசிறி அருகே வாலிபரை குத்திக்கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

முசிறி அருகே வாலிபரை குத்திக்கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில் திருவிழா

முசிறி அருகே சுக்காம்பட்டி கிராமத்தில் சோழராஜா பட்டாளம்மன் குடிபாட்டு கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு நடத்தி வரும் பங்காளிகள் திருவிழா நடத்தினர். இந்த திருவிழாவின் போது, மண்ணச்சநல்லூர் தாலுகா சுனைபுகநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பொங்கல் வைத்து விருந்து வைத்தார்.

இந்த விருந்திற்கு சுனைப்புகநல்லூரை சேர்ந்த பிச்சை மகன் தீபக் (18), பெயிண்டர் சென்றுள்ளார். இதேபோல் அதே ஊரை சேர்ந்த உதயகுமார் (31), உதய பிரகாஷ் (27) ஆகிய இருவரும் ராம்குமார் என்பவருடைய வீட்டின் விருந்துக்காக சென்றுள்ளனர்.

குத்திக்கொலை

அப்போது தீபக், உதயகுமார், உதயபிரகாஷ் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாகியது. இதில் உதயகுமார், உதயபிரகாஷ் ஆகியோர் சேர்ந்து தீபக்கை கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உதயகுமார், உதயபிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story