பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது


பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது
x

பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பாப்பாநாடு உள்ளிட்ட கிராமங்களில் வயல்வெளியில் ஆடு-மாடு மேய்க்கும் பெண்களை கண்டறிந்து ஒரு கும்பல் குறி வைத்து நகை பறிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இந்த கும்பலை பிடிக்க ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆடு மேய்க்கும் பெண்களிடம் நகை பறித்ததாக கண்ணுகுடி பகுதியில் நின்று கொண்டிருந்த திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 40) மற்றும் நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த கட்டை ரமேஷ் (27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் பல போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


Next Story