லாரிகளில் இருந்து மதுபாட்டில்களை திருடிய 2 பேர் கைது


லாரிகளில் இருந்து மதுபாட்டில்களை திருடிய 2 பேர் கைது
x

திருபுவனம் டாஸ்மாக் குடோனில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் இருந்து மதுபாட்டில்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே திருபுவனம் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் இறக்குவதற்காக மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த லாரியின் மேலே போடப்பட்டிருந்த தார்பாயை கிழித்து 10-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்கள் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில்,மயிலாடுதுறை மூவலூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அழகர் மகன் வினோத் (வயது24), அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (38) ஆகிய 2 பேரும் மதுபாட்டில்கள் திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story