தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூரமங்கலம்:-
சேலம் மாமாங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 49), கூலி தொழிலாளியான இவர், மூலக்கடை பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த 2 பேர், அவரை வழிமறித்து மிரட்டி செல்போன், ரூ.1,350-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜூவிடம் செல்போன், பணம் பறித்ததாக சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்த தட்சணாமூர்த்தி, 5 ரோடு ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த வசந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire