மான் கொம்புகளை விற்க முயன்ற 2 பேர் கைது
ஆலங்குளம் அருகே மான் கொம்புகளை விற்க முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் கிராமத்தை சேர்ந்த சுந்தரபாண்டி என்பவருடைய மகன் நிர்மல்குமார் என்ற அயன், கருத்தபாண்டி மகன் கிள்ளி என்ற மருதையா ஆகிய இருவரும் மான் கொம்புகளை விற்க முயற்சி செய்வதாக நெல்லை வனச்சரக அலுவலர் சரவணகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில் ஆலங்குளம் பிரிவு வனவர் சங்கர்ராஜா, சிவலார்குளம் பீட் வனக்காப்பாளர் டென்சிங், கங்கைகொண்டான் பீட் வனக்காப்பாளர் மதியழகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி நிர்மல்குமார், மருதையா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 6 மான் கொம்புகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, இருவருக்கும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story