மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 போ் சாவு
நரிப்பள்ளி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியானார்கள்.
அரூர்:
விபத்து
தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிக்கல் ஊர் பெரியபட்டி பகுதியை சேர்ந்த சேட்டு மகன் வெங்கடேசன் (வயது 31) என்பவரும், அர்ஜுன் மகன் நவீன் (32). இவா்கள் 2 பேரும் மதிகுழாம்பட்டிக்கு வேலை விஷயமாக சென்றுவிட்டு நேற்று முன்தினம் தனது ஊர் பெரியபட்டிக்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
இரவு 11 மணி அளவில் தீர்த்தகிரி அருகே நெடுஞ்சாலை ரோடு பகுதியில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர புளிய மரத்தில் மோதியது.
2 பேர் சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன், நவீன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் கோட்டப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.