தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் 2 படகுகள் கவிழ்ந்தன 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் 2 படகுகள் கவிழ்ந்தன. அவற்றில் இருந்த 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதுக்கடை:
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் 2 படகுகள் கவிழ்ந்தன. அவற்றில் இருந்த 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தொடரும் சம்பவங்கள்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் சரியான கட்டமைப்பில் இல்லாததால் முகத்துவாரத்தில் அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதையடுத்து மீனவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய அரசு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தற்போது வானிலை மோசமாக இருப்பதால் 9-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்லக்கூடாது என அரசு அறிவித்திருந்தது.
படகுகள் கவிழ்ந்தன
இந்தநிலையில் இனயம்புத்தன்துறையை சேர்ந்த 2 படகுகளில் 4 மீனவர்கள் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்துவிட்டு துறைமுக முகத்துவாரத்தில் வந்த போது ராட்சத அலையில் சிக்கி 2 படகுகளும் கவிழ்ந்தன. அவற்றில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் கடலில் நீந்தி உயிர் தப்பினர்.
இதில் ஒரு படகு தண்ணீரில் மூழ்கியது. மற்றொரு படகை கயிற்றில் கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். துறைமுக முகத்துவார பகுதியில் அடிக்கடி படகு கவிழ்ந்து வருவதால் மீனவர்கள் சோகத்தில் உள்ளனர்.