மோட்டார் சைக்கிள் திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது
மோட்டார் சைக்கிள் திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை பள்ளிகொண்டாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42), விவசாயி.
இவர் நேற்று மாலை திருவண்ணாமலை மாடவீதியில் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் சென்று இருந்தார். பின்னர் வந்து பார்க்கும்போது அவரது மோட்டார் சைக்கிளை 3 சிறுவர்கள் திருட முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடிக்க முயன்றதில் ஒரு சிறுவர் தப்பி ஓடிவிட்டார்.
மற்ற 2 பேர் சிக்கினர். பின்னர் அவர்களை திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் பிடிபட்ட 2 சிறுவர்களில் ஒருவருக்கு 17 வயதும், மற்றொருவருக்கு 16 வயதும் ஆனது என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சிறுவனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story