ரங்க ராட்டினம் சரிந்து விழுந்து 2 சிறுவர்கள் படுகாயம்


ரங்க ராட்டினம் சரிந்து விழுந்து 2 சிறுவர்கள் படுகாயம்
x

பேரணாம்பட்டு அருகே ரங்க ராட்டினம் சரிந்து விழுந்து 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லல குப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவின் போது ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை சேர்ந்த லோகநாதன் என்பவர் ரங்க ராட்டினம் அமைத்திருந்தார். நேற்று மாலை 6.45 மணியளவில் இந்த ரங்க ராட்டினத்தில் பல்லல குப்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என 50-க்கு மேற்பட்டோர் பொழுது போக்குக்காக ஏறி அமர்ந்திருந்தனர்.

அப்போது ரங்க ராட்டினத்தின் நடுப்பகுதியின் அச்சு முறிந்து ரங்க ராட்டினம் பயங்கர சத்தத்துடன் ஒரு பக்கமாக சரிந்தது. இதனால் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் அலறி கூச்சலிட்டனர். ரங்க ராட்டினம் ஒரு பக்கமாக சரிந்ததில் யாருக்கும் உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை. இந்த விபத்தில் பல்லல குப்பம் கிராமத்தை சேர்ந்த சபரீசன் (10), செண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சைதன்யா (11) ஆகிய 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனை, மேல் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது சம்மந்தமாக பேரணாம்பட்டு வருவாய் துறையினர், மேல் பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story