மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆம்பூர் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூர்
வாணியம்பாடி சப்-கலெக்டர் பிரேமலதா நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஆம்பூரில் இருத்து வாணியம்பாடி நோக்கி அரசு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
ஆம்பூர் டவுன் சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலை சிக்னல் அருகே ம்பூர் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகளை சப்-கலெக்டர் மடக்கி பிடிக்க முயன்றபோது மாண்டு வண்டிகளை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி விட்டு 5 பேர் ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து சப்- கலெக்டர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் 2 மாட்டு வண்டிகள், 4 மாடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story