2 கன்றுகளை ஈன்ற பசு
திண்டுக்கல் அருகே ஒரே நேரத்தில் 2 கன்றுகளை பசு ஈன்றது.
திண்டுக்கல் அருகே உள்ள தோமையார்புரத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் மென்டோன்சா. இவர், தனது வீட்டில் 3 நாட்டு மாடுகள், 9 சிந்து வகை மாடுகளை வளர்த்து வருகிறார். அவரிடம் உள்ள சிந்து வகை மாடு ஒன்று சினையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் அந்த மாடு 2 கன்றுகளை ஈன்றது. ஒன்றின் பின் ஒன்றாக 2 காளை கன்றுகள் அந்த மாடு ஈன்றது. பொதுவாக பசுமாடு ஒரு கன்று மட்டுமே ஈனுவது வழக்கம். ஆனால் சிந்து வகை மாடு ஒரே நேரத்தில் 2 கன்றுகளை ஈன்றதை அறிந்த அக்கம்பக்கத்தினர் பசுவையும், கன்றுகளையும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire