அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன
தஞ்சாவூர்
திருக்காட்டுப்பள்ளி
பூதலூர் அருகே உள்ள ராயந்தூர் வெண்ணாற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக பூதலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ராயந்தூர் வெண்ணாறு சுடுகாடு அருகே மணல் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது ெதரிய வந்தது. இதனையடுத்து அதன் டிரைவர் கள்ளப்பெரம்பூரை சேர்ந்த விஜய்(வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல மற்றொரு சரக்கு வேனில் மணல் ஏற்றி வந்தவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டார். அந்த சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story