சோலார் அருகே 2 கார்கள் மோதல்கோவையை சேர்ந்த டிரைவர் சாவு;அக்காள்-தம்பி படுகாயம்


சோலார் அருகே 2 கார்கள் மோதல்கோவையை சேர்ந்த டிரைவர் சாவு;அக்காள்-தம்பி படுகாயம்
x

சோலார் அருகே 2 கார்கள் ேமாதிக்கொண்ட விபத்தில் கோவையை சேர்ந்த டிரைவர் பலியானார். அக்காள், தம்பி படுகாயம் அடைந்தார்கள்.

ஈரோடு

சோலார்

சோலார் அருகே 2 கார்கள் ேமாதிக்கொண்ட விபத்தில் கோவையை சேர்ந்த டிரைவர் பலியானார். அக்காள், தம்பி படுகாயம் அடைந்தார்கள்.

கார் மோதியது

கோவை பிக்பஜார் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் பிரேம்குமார் (வயது 32). கார் டிரைவர். இவருைடய உறவினர்கள் ஈரோட்டை அடுத்துள்ள சோலார் முத்துக்கவுண்டன்பாளையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்தார்கள். அவர்களை மீண்டும் கோவைக்கு அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் பிரேம்குமார் தன்னுடைய மாமாவின் காரை எடுத்துக்கொண்டு சென்றார்.

கவுண்டம்பாளையம் ரிங் ரோடு வளைவில் அவர் திரும்பும்போது, பின்னால் வேகமாக வந்த ஒரு கார் பிரேம்குமாரின் கார் மீது மோதியது.

பலி

இந்த விபத்தில் பிரேம்குமார் மற்றும் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன், அதில் பயணம் செய்த அவரின் அக்காள் வளர்மதி ஆகியோர் படுகாயம் அடைந்தார்கள்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரேம்குமார் இறந்துவிட்டதாக கூறினார்கள்.

ராஜேந்திரனும், வளர்மதியும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story