போலி டாக்டர்கள் நடத்திய 2 கிளினிக்குகளுக்கு 'சீல்'
ஆம்பூர் பகுதியில் போலி டாக்டர்கள் நடத்திய 2 கிளினிக்குகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்ய திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி போலி டாக்டர்களை கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் 9 போலி டாக்டர்களை கைது செய்தனர். அதில் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் பாலகிருஷ்ணன் (வயது 63) மற்றும் வீராங்குப்பம் பகுதியில் ஜெயபால் (59) ஆகிய இரண்டு போலி டாக்டர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நடத்தி வந்த 2 கிளினிக்குகளுக்கும் அதிகதாரிகள் சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story