2 கல்லூரி மாணவிகள் மாயம்
2 கல்லூரி மாணவிகள் மாயமானார்கள்.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் கல்பனாசாவ்லா (வயது19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கோவையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு வந்த கல்பனா சாவ்லா வீட்டிற்கு வரவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இது குறித்து அவருடைய தாய் கொடுத்த புகாரின் பேரில் செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
இதேபோல் திருச்சி நாகமங்கலம் மேக்குடி பகுதியை சேர்ந்தவர் தாமரை செல்வி (19). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்த இவர், சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.