கட்டிட தொழிலாளிகள் 2 பேர் மின்சாரம் பாய்ந்து சாவு


கட்டிட தொழிலாளிகள் 2 பேர் மின்சாரம் பாய்ந்து சாவு
x

வெவ்வேறு சம்பவங்களில் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலியானார்கள்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலியானார்கள்.

கட்டிட தொழிலாளிகள்

திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 3-வது வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 56). இவருடைய மனைவி செல்வி (50). தம்பதி இருவரும் கட்டிட தொழிலாளிகள். நேற்று முன்தினம் மதியம் ஆரோக்கியராஜ் துரைசாமிபுரம் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்

அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

திருச்சி கீழப்புலிவார்டு சாலை சத்தியமூர்த்திநகர் அந்தோணியார் வீதியை சேர்ந்தவர் சங்கர் (33). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 23-ந்தேதி வேதாத்திரிநகரில் நடராஜன் என்பவரின் வீட்டு மாடியில் நின்று வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது, மின்கம்பியில் அவருடைய கைபட்டதில் மின்சாரம் பாய்ந்து 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 27-ந்தேதி இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story