கிருஷ்ணகிரி, ஓசூர் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனையாக ரூ.2 கோடி இலக்கு-கலெக்டர் தகவல்


கிருஷ்ணகிரி, ஓசூர் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனையாக ரூ.2 கோடி இலக்கு-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, ஓசூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை செய்ய ரூ.2 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

தீபாவளி சிறப்பு விற்பனை

கிருஷ்ணகிரியில் கிழக்கு சந்திப்பு சாலை கோ-ஆப்ரெட்டிவ் காலனியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். மேலும் அவர் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்து, ஜவுளி ரகங்களை பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய டிசைன்களில், அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சீபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், சேலம், தஞ்சாவூர் பட்டு புடவைகள் மற்றும் புதிய டிசைன்களுடன் கூடிய மென் பட்டு புடவைகள் விற்பனைக்காக ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபிள் மேட், ஸ்கிரீன் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட கேட்டுக்கொள்கிறேன்.

கிருஷ்ணகிரி, ஓசூர்

மேலும், மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் விற்பனை நிலையங்களுக்கு தீபாவளி விற்பனை இலக்காக ரூ.2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லாத கடன் வசதியில் 30 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் காங்கேயவேலு, கிருஷ்ணகிரி விற்பனை நிலைய மேலாளர் (பொறுப்பு) சிலம்பரசன், தாசில்தார் சம்பத், வருவாய் ஆய்வாளர் குசேலகுமார், கிராம நிர்வாக அலுவலர் ஷமியுல்லாகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story