மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2 கோடி வங்கி கடன் உதவி


மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2 கோடி வங்கி கடன் உதவி
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2 கோடி வங்கி கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பாராட்டு சான்று மற்றும் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் குழுக்களுக்கு பாராட்டு சான்று வழங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மூலம் மகளிர் தினத்தையொட்டி 50 மகளிர் குழுக்களுக்கு ரூ.2 கோடிக்கான சுழல் நிதி கடனுதவிகளை வழங்கினார். மேலும் மகளிர் குழு சுயதொழில் தொடங்க தேவையான கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். இதனை மகளிர் குழுவினர் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வாழ்வாதார இயக்க அலுவலர்கள் சரவணபாண்டியன், கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story