ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு கடன்


ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு கடன்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு கடனை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு கடனை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

ரூ.2 கோடி கடன் உதவிகள்

மயிலாடுதுறை நீடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான திட்ட விளக்கம் மற்றும் உறுப்பினர் கல்வித் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.

முகாமில் கூட்டுறவுத்துறை மூலம் வழங்கப்படும் கடன்கள் குறித்தும் துறை செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.16.72 கோடி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக 50 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை வழங்கினார்.

ரூ.ஆயிரம் கோடி இலக்கு

அப்போது கலெக்டர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நகை கடன், பயிர் கடன், சிறுகுறு தொழில் முனைவோர் கடன், சுயஉதவிக்கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், உள்ளிட்ட பல்வேறு கடன்களாக ரூ.ஆயிரம் கோடி வழங்குவதற்கு இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ. 16.72 கோடி மதிப்பீட்டில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்களின் பொருளாதாரம் அதிகரிக்கும் வகையில் பொதுமக்கள் கடன்களைப் பெற்று வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இணைபதிவாளர் பெரியசாமி, மாவட்ட வருவாய் ஆய்வாளர் முருகதாஸ் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story