243 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்


243 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
x

மோர்தானா ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 243 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

வேலூர்

மனுநீதி நாள் முகாம்

குடியாத்தம் வட்டம், மோர்தானா ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் தனஞ்செயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் கீதா, மகளிர் திட்ட அலுவலர் நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், முன்னோடி வங்கி மேலாளர் ஜமாலுதீன், தாட்கோ மேலாளர் பிரேமா, மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் பானுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன், ஒன்றியக்குழு உறுப்பினர் கோதண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் விஜயகுமார் வரவேற்றார்.

குடியாத்தம் தொகுதி அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி 243 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 15 லட்சத்து 88 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்.

முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

கணக்கெடுப்பு பணி

பொதுமக்களின் கோரிக்கைகளை பொதுமக்களின் இடங்களுக்கே சென்று பெற்று அதன் மீது தீர்வு காணவே ஒவ்வொரு மாதமும் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. இந்த மனுநீதி நாள் முகாமில் ஏற்கனவே பெறப்பட்ட 278 மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு 243 பயனாளிகளுக்கு ரூ.2.16 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கும் பணிகளும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கவும் கணக்கெடுப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, துணை தாசில்தார் சுபிச்சந்தர், வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாத், கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story