வாகனம் மோதி இறந்த மரநாய் உடலை சுற்றிவந்த 2 குட்டிகள்


வாகனம் மோதி இறந்த மரநாய் உடலை சுற்றிவந்த 2 குட்டிகள்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அருகே வாகனம் மோதி இறந்த மரநாய் உடலை சுற்றிவந்த 2 குட்டிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி சமத்துவநகர் அருகே அரியவகை மரநாய் ஒன்று 5 நாட்களுக்கு முன்பு வாகனத்தில் அடிபட்டு இறந்தது. அதன் உடல் அழுகிய நிலையில் சாலையோரத்தில் கிடந்தது. இந்தநிலையில் அந்த மரநாயின் 2 குட்டிகள், தாய் இறந்த சோகத்தில் அதன் உடலை விட்டு செல்லாமல் சுற்றி வந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் வனத்துறையினர் அந்த பகுதிக்கு வந்து 2 மரநாய் குட்டிகளை மீட்டனர். அவற்றை சிலமாதங்கள் வனத்துறையினர் பாதுகாப்பில் வைத்து பராமரித்து, காட்டுப்பகுதியில் விட இருப்பதாக தெரிவித்தனர்.


Next Story