பொறியாளர்களுக்கு 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி


பொறியாளர்களுக்கு 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி
x

சிப்காட்டில் பொறியாளர்களுக்கு 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள அல்ட்ராமரைன் மற்றும் பிக்மெண்ட்ஸ் நிறுவனத்தில் 2 நாட்கள் ரசாயன திறன் மேம்பாட்டு குழுமத்தின் சார்பாக பொறியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ராஜன் தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சியில் அல்ட்ராமரைன், திருமலை, மல்லாடி, ஸ்டால், சுவிஸ் லேப் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து 35 பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியின் முடிவில் முன்னாள் இணை இயக்குனர் முகமது கனி கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அல்ட்ராமைரன் நிறுவனத்தைச் சேர்ந்த வடிவேலன், திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த வெங்கட், ராகவன், மல்லாடி நிறுவனத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல்ட்ராமைரன் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ரவி செய்திருந்தார்.


Next Story