கோத்தகிரியில் ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்
கோத்தகிரியில் ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கோத்தகிரி
கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் நிலையான வளர்ச்சி இலக்குகளை உருவாக்குதல் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் கோத்தகிரியில் நடைபெற்றது. முகாமில் யூடியூப் செயலி மூலம் மின்னொலி திரையில் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இதில் 2022-23 ஆண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த 2 நாள் பயிற்சி முகாமில் மூன்றடுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளான ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், அனைத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் உள்பட வருவாய்த்துறையினர், வட்ட வழங்கல் அலுவலர், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதார துறை, மின்சார துறை, கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.