தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2 நாட்கள் ஆட்சிமொழி பயிலரங்கம்
திருவண்ணாமலையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2 நாட்கள் ஆட்சி மொழி பயிலரங்கம் நடந்தது.
திருவண்ணாமலையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2 நாட்கள் ஆட்சி மொழி பயிலரங்கம் நடந்தது.
ஆட்சிமொழி பயிலரங்கம்
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் 2 நாள் கருத்தரங்கு நடந்தது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் சிவசாமி ஆட்சிமொழி வரலாறு, சட்டம் என்ற தலைப்பிலும், சு.வாளவெட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் வேலாயுதம் மொழிப்பயிற்சி என்ற தலைப்பிலும், திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் சாந்தமூர்த்தி ஆட்சிமொழி செயலாக்கம் அரசாணைகள் என்ற தலைப்பிலும் பயிற்சி அளித்தனர்.
மாணவர்களுக்கு பரிசு
இதில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள் கலந்து கொண்டு அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தி 100 சதவீதத்தை எட்ட வேண்டும்.
அதற்கு அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட உதவி இயக்குனர் ஜெயஜோதி, தர்மபுரி தமிழ்ச் சங்க செயலாளரும், பட்டிமன்ற பேச்சாளருமான சவுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
2 நாட்கள் நடைபெற்ற பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறையின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.