இறந்து கிடந்த 2 காட்டு யானைகள்


இறந்து கிடந்த 2 காட்டு யானைகள்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மசினகுடி பகுதியில் 2 பெண் காட்டு யானைகள் இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்,

மசினகுடி பகுதியில் 2 பெண் காட்டு யானைகள் இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டு யானை சாவு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நீலகிரி கிழக்கு சரிவு சரகம் தெங்குமரஹடா கல்லாம்பாளையம் வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் காட்டு யானை இறந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் மணி வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த யானைக்கு 50 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை

இதேபோல் மசினகுடி சரகத்துக்கு உட்பட்ட அவரல்லா பிரிவு மாவனல்லா பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை இறந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் பாலாஜி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

பின்னர் வயது முதிர்வு காரணமாக காட்டு யானை இறந்தது என தெரிய வந்தது. பின்னர் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து பிற வன உயிரினங்களுக்கு இரையாகும் வகையில் யானையின் உடல் அப்பகுதியில் விடப்பட்டது. இதுகுறித்து மசினகுடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை தொடர்ந்து உயிரிழந்து வருவது வன ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story