2 பேர் `திடீர்' சாவு


2 பேர் `திடீர் சாவு
x

நெல்லையில் எல்.ஐ.சி. ஊழியர் உள்பட 2 பேர் `திடீர்' சாவு

திருநெல்வேலி

நெல்லை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் அந்தோணி. எல்.ஐ.சி. ஊழியரான இவர் நேற்று குலவணிகர்புரம் பகுதியில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிர் இழந்த அந்தோணியின் மனைவி பீபி பத்தமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக உள்ளார்.

அதே போல் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் முன்னீர்பள்ளம் டாஸ்மாக் குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story