ரூ.16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையம்


ரூ.16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர்  மீட்பு மையம்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே ரூ.16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையம் அமையவுள்ளது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர திட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் புயல், மழை மற்றும் பேரிடர் காலத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் 2 புயல் வெள்ள பாதுகாப்பு மையக் கட்டிடங்கள் கட்டுவதற்கு தமிழக முதல்- அமைச்சர் சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நாதல்படுகை கிராமத்துக்கு நேரில் சென்று கட்டிடம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் முதலைமேடு கிராமத்தில் மற்றொரு புயல் வெள்ள பாதுகாப்பு மையக் கட்டிடம் அமைய உள்ள இடத்தையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ் வேந்தன், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, விவசாயிகள் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள், கிராம மக்கள் உடன் இருந்தனர்.


Next Story