மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் பலி
தூக்கிச்சென்ற இரும்பு ஏணி மின்கம்பியில் உரசியதால், மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர்.
தூக்கிச்சென்ற இரும்பு ஏணி மின்கம்பியில் உரசியதால், மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர்.
அப்பளம் தயாரிக்கும் நிறுவனம்
விருதுநகர் அருகே உள்ள சூரம்பட்டியில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த நிதின் நாயுடு என்பவர் அப்பளம் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். இந்த நிறுவனத்தில் சூரம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (வயது 30), ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளத்தை சேர்ந்த ராஜா (26) ஆகிய 2 பேரும் பணியாற்றி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று ஒரு இரும்பு ஏணியை இவர்கள் இருவரும் எடுத்துச் சென்றனர். அப்போது மேலே உள்ள மின்கம்பியில் ஏணி பட்டதால் இருவரையும் மின்சாரம் தாக்கியது.
2 பேர் சாவு
இவர்கள் இருவரும் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.